மகிழ்ச்சி செய்தி: மஹாராஷ்டிராவில் குறைந்தது கொரோனா பாதிப்பு….புதிய பாதிப்பு 22,122 ஆக பதிவு!

தொடர்ந்து ஐந்தாவது நாளாக குறைந்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கை – மஹாராஷ்டிரா அரசு.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா கட்டுத்தீ போல் பரவி வந்ததது, இதனையடுத்து இறப்பு எண்ணிக்கையோ நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வந்த நிலையில் அங்கு முழு ஊரடங்கு பிரப்பிக்கப்பட்டது, இதனையடுத்து அங்கு கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கை கனிசமாக குறைந்துள்ளது, மேலும் கடந்த சில மாதங்களாக அங்கு நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா தொற்று பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மஹாராஷ்டிராவில் கொரோனா புதிய பாதிப்பு 22,122 ஆக பதிவாகியுள்ளது, மேலும் இறப்பு எண்ணிக்கை 361 ஆகவும், இதுவரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,602,019 ஆக அதிகரித்துள்ளது, இதுவரை இறப்பு எண்ணிக்கை 89,212 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது, மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 42,000 பேர் குணமடைந்த நிலையில் இதுவரையிலும் 5,182,592 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,27,580 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக மஹாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. மேலும் திங்களன்று மும்பையில் மட்டும் 1,057 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு 372 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மஹாராஷ்டிரா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.