ட்விட்டர் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. புதிய அப்டேட் ‘Notes’ விரைவில் அறிமுகம்!

ட்விட்டர் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. புதிய அப்டேட் ‘Notes’ விரைவில் அறிமுகம்!

ட்விட்டர் புதிய அம்சத்தை சோதனை செய்து வருகிறது, பயனர்கள் 2,500 வார்த்தைகள் வரை “குறிப்புகளை” பகிர்ந்து கொள்ளலாம் என அறிவிப்பு.

பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனம், தனது அமைப்பில் புதிய அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. அதற்கான பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ட்விட்டர் நிறுவனம், உலகளவில் முக்கிய தளமாக உள்ளது. ஏனெனில், ட்விட்டர் தளத்தில் உலக அரசியல், சமூக நிகழ்வு உள்ளிட்ட அனைத்தும் பேசப்படுகிறது பகிரப்படுகிறது. உலக தலைவர்கள் பெரும்பாலானோர் இந்த தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், ட்விட்டர் தளம் மிக பிரபலமாக காணப்படுகிறது. இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனம் புதிய அம்சத்தை சோதனை செய்து வருகிறது, பயனர்கள் 2,500 வார்த்தைகள் வரை “குறிப்புகளை” (Notes) பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

அதாவது, ட்விட்டர் சமூக ஊடகம் வாயிலாக 2,500 எழுத்துக்கள் கொண்ட தகவலை பகிர்வது தொடர்பாக அந்நிறுவனம் பரிசோதனையை தொடங்கியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் கானாவை சேர்ந்த சில எழுத்தாளர்களுக்கு புதிய வசதியை அளித்து ட்விட்ர் நிறுவனம் ஆய்வு நடத்தி வருகிறது. ட்விட்டர் நிறுவனம் அறிமுகமானபோது 140 எழுத்துக்களாக இருந்த தகவல் அளவு, 2017-ல் 280 எழுத்துக்களாக உயர்த்தப்பட்டது. தற்போது 2,500 எழுத்துக்களை கொண்ட தகவலை பரிமாறும் வகையில் புதிய வசதியை உருவாக்க ட்விட்டர் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இரண்டு மாதங்களுக்கு இந்த சோதனை நடைபெறும் என கூறியுள்ளது.

புதிய அம்சம் பார்வையாளர்களை ட்விட்டர் அமைப்பில் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வாசகர்கள் ஒரு தலைப்பைப் பார்க்க முடியும் மற்றும் இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் நீண்ட குறிப்பை அணுக முடியும். நிறுவனத்தின் ஆரம்ப நாட்களில் இருந்து, எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், கவனிக்கப்படவும், படிக்கவும், உரையாடலை உருவாக்கவும் ட்விட்டரைச் சார்ந்து இருக்கிறார்கள். இதனால் புதிய அம்சமான நோட்ஸ்ஸை உருவாக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய அம்சத்தில் ட்விட்டரில் படிக்கக்கூடிய நீண்ட வடிவக் கட்டுரைகளில் gifகள், புகைப்படங்கள் மற்றும் பிற அம்சங்களை உட்பொதிக்க எழுத்தாளர்களை அனுமதிக்கும். பயனர்கள் தங்கள் குறிப்புகளை வெளியிட்ட பிறகு அவற்றைத் திருத்தவும் முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த பரிசோதனை வெற்றியடைந்த பின் Notes என்ற பெயரில் புதிய வசதியை அறிமுகம் செய்ய ட்விட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *