எதிரிகளுடன் விளையாடுவதற்கு நல்ல களம் : சினேகன்

13
  • எதிரிகளுடன் விளையாடுவதற்க்கு சிவகங்கை தொகுதி நல்ல களமாக அமையும் என்றும் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, தமிழகமெங்கும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக களமிறங்கியுள்ளது.

இந்நிலையில், அனைத்து கட்சிகளிலும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் சார்பில், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பாடலாசிரியராக சிநேகன் போட்டியிடுகிறார். அப்போது இவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நான் இங்கு போட்டியிடுவது தலைமை எடுத்த முடிவு என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சிவகங்கை தொகுதி மிகவும் சவாலான தொகுதி என்றும், என்னுடைய எதிரிகள் மிகவும் பலமானவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பேன் என்றும், எதிரிகளுடன் விளையாடுவதற்க்கு சிவகங்கை தொகுதி நல்ல களமாக அமையும் என்றும் கூறியுள்ளார்.