கோவை விமான நிலையத்தில் ரூ.3.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..! ஒருவர் கைது..!

கோவை விமான நிலையத்தில் ரூ.3.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

ஷார்ஜாவில் இருந்து கோயம்புத்தூர் வந்த விமானத்தில் பயணம் செய்த பயணியிடம் இருந்து 3.8 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாநிலம் விமானநிலையத்தில் வழக்கமாக நடைபெறும் சோதனைகள் நடந்து கொண்டிருந்தது.

அப்பொழுது ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் பயணம் செய்த 11 பயணிகளை தடுத்து நிறுத்தி அவர்களை சோதனை செய்தனர். அதில் ஒருவரிடம் இருந்து சுமார் ரூ.3.8 கோடி மதிப்புள்ள 6.62 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து அந்த நபரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

பின்னர் நடந்த விசாரணையில் அந்த நபர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான அர்ஜுனன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment