சவரன் 32 ஆயிரம் கீழ் சென்றது தங்கம்.! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்.!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்து ரூ.31,472க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.79 குறைந்து ரூ.3,934க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2 குறைந்து ரூ.44.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.33,656 விற்பனையாகிறது. 

கொரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து, நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,096 குறைந்து, ரூ.32,160க்கு விற்பனையானது. இன்று மேலும் குறைந்து, சவரனுக்கு ரூ.632 குறைந்து ரூ.31,472க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்