கிடுகிடுவென உயரும் தங்க விலை! ஒரேநாளில் ரூ.536 அதிகரிப்பு!

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.536 அதிகரிப்பு. கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த

By leena | Published: May 08, 2020 01:23 PM

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.536 அதிகரிப்பு.

கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நகைக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலானோர் ஆன்லைனில் ஆர்டர் செய்து, நகைகளை வாங்கி வருகின்றனர். 

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில், சென்னையில் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.536 உயர்ந்து, ரூ.35,592-ஆகவும், கிராமுக்கு ரூ.67 உயர்ந்து, ரூ.4,449 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும், வெள்ளி விலை, கிராமுக்கு ரூ.0.75 காசுகள் உயர்ந்து, கிராம் ரூ.42.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.42,500 ஆகவும் விற்பனையாகிறது. 

Step2: Place in ads Display sections

unicc