அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை…! சவரனுக்கு ரூ.168 உயர்வு..!

சென்னையில், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 அதிகரித்து, ஒரு சவரன், ரூ.36,496-க்கு விற்பனையாகிறது. 

தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்வை சந்தித்து வருகிற நிலையில், இன்றும் தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 அதிகரித்து, ஒரு சவரன், ரூ.36,496-க்கும், ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.21 அதிகரித்து, ரூ.4,562-க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி ஒரு கிராம் ரூ.73.20-க்கு விற்பனையாகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.