தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 குறைவு.!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 குறைவு.!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து ரூ.42,864க்கு விற்பனை.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை கடந்த ஜூன் மாதத்திலிருந்து குறையாமல் உயர்ந்து கொண்டேதான் வந்தது, ஆனால் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

அந்த வகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து ரூ.42,864க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.27 குறைந்து ரூ.5358க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் அதைபோல் சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 77 காசுகள் குறைந்து 82.63 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.