இன்று தங்கம் ,வெள்ளி விலை சரிந்தது !

சர்வதேச சந்தையில் சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்தும் ,குறைந்தும் காணப்படுகிறது .சென்னையில் நேற்று மாலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.24,304-க்கு விற்கப்பட்டது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 208 ரூபாய் வரை குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,012 ஆகவும், சவரனுக்கு ரூ. 24,096-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தூய தங்கத்தின் விலையும்  குறைந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,163 ஆகவும், சவரனுக்கு ரூ.25,304-க்கும்  விற்பனை செய்து வருகின்றனர்.

இன்று வெள்ளியின்  விலை  கிராமுக்கு 70 காசுகள் குறைந்து 39.80 காசுகளாக விற்பனை செய்து வருகின்றனர்.

author avatar
murugan

Leave a Comment