கடவுளின் சூப்பர் கம்யூட்டர் தான் கொரோனா வைரஸை உலகிற்கு அனுப்பியுள்ளது…! அஸ்ஸாம் அமைச்சர் அதிரடி..!

கடவுளின் சூப்பர் கம்யூட்டர் தான் கொரோனா வைரஸை உலகிற்கு அனுப்பியுள்ளது. 

அசாம் மாநிலம் கவுகாத்தியில், அசாம் அமைச்சர் சந்திர மோகன் படோவரி,  கொரோனாவால் கணவனை இழந்த விதவைகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸை கடவுளின் சூப்பர் கம்ப்யூட்டர் அனுப்பியுள்ளது. இந்த தொற்றுநோய் மனிதனால் உருவாக்கப்படவில்லை.

எனவே கொரோனா தோற்றால் யார் பாதிக்கப்படுவார்கள்?, யார் பாதிக்கப்பட மாட்டார்கள்?, யார் பூமியில் இருந்து எடுத்து செல்லப்படுவார்கள்? என்பதை இயற்கை முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இரண்டு தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களும்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இருப்பினும் இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால் WHO போன்ற ஒரு பெரிய அமைப்பு ஏன் தொற்று நோயை தடுக்க மருத்துவத்தை கண்டுபிடிக்க தவறிவிட்டது. டிப்டாப் விரிவுரைகளை வழங்கும் விஞ்ஞானிகள் எங்கே? கொரோனாவில் இருந்து நிவாரணம் அளிக்கும் ஒரு மருந்தை கண்டுபிடிப்பதில் உலகம் முழுவதும் தோல்வி அடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.