பொங்கல் பண்டிகையையொட்டி எட்டயாபுர ஆட்டுச்சந்தையில் ஆடுகள் அமோக விற்பனை…!!!

பொங்கல் பண்டிகையையொட்டி எட்டயாபுர ஆட்டுச்சந்தையில், ஆடுகள் ரூ.7 கோடி வரை விற்பனையாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி கோவில்பட்டி, எட்டயபுர ஆட்டுச்சந்தையில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. வரும் செவ்வாய் கிழமை பொங்கல் பண்டிகை என்பதால் விற்பனை அதிகரித்துள்ளது. சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

4 ஆயிரம் ரூபாய் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரையிலான ஆடுகள் எடைக்கு ஏற்ப விற்பனையாகியுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் ரூ.7 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.1கோடி அதிகமாக விற்பனையாகியுள்ளது.