பெட்ரோல் வாங்க லோன் கொடுங்க சார்…! வங்கியில் மனு அளித்த இளைஞர்கள்…!

கல்வி மற்றும் வாகனங்களுக்கு வங்கி கடன் வழங்குவது போன்று, நாட்டு மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவையான பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவுக்கு தனிநபர் கடன் வழங்க வேண்டும்.

சமீப நாட்களாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் பலரும் வேதனைக்குள்ளான நிலையில், தேனியில், ஒரு அமைப்பினை இளைஞர்கள், அல்லிநகரம் கனரா வங்கியில் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், ‘கொரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த  நடுத்தர,ஏழை எளிய மக்கள் வறுமையின் விளிம்பு நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான மத்திய, மாநில அரசுகளின் வரி உயர்வினால் மேற்கண்ட அடிப்படை பொருட்களின் விலை மாபெரும் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்த கடுமையான விலையேற்றத்தால், நடுத்தர ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே அவர்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரதையும் மேம்படுத்த கல்வி மற்றும் வாகனங்களுக்கு வங்கி கடன் வழங்குவது போன்று, நாட்டு மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவையான பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவுக்கு தனிநபர் கடன் வழங்க வேண்டும்.’ என தெரிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு வாங்க வங்கி கடன் கேட்ட இளைஞர்களின் இந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.