திருமணத்திற்காக மூன்று லட்சம் வரதட்சணை கேட்ட காதலி – தற்கொலை செய்துகொண்ட காதலன்!

திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் மூன்று லட்சம் ரூபாய் தரவேண்டும் என காதலியின் குடும்பத்தினர் கூறியதை அடுத்து மன உளைச்சலில் காதலன் தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள ராமேல் எனும் பகுதியை சேர்ந்தவர் தான் 24 வயதுடைய மெஹ்தாப் ஷேக். பைசல்நகரில் குடியிருந்த பொழுது ஃபிர்தவுஸ் எனும் பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து போனில் அடிக்கடி பேசி வந்ததால், அவ்வப்போது சந்தித்து ஊர் சுற்றுவது மற்றும் அந்த பெண்ணிற்காக செலவு செய்வது என பணத்தை கழித்துள்ளார் மெஹ்தாப். இந்நிலையில் தனது குடும்பத்தினர் வறுமையில் வாடுவதாகவும் இனி அவ்வளவாக செலவு செய்ய முடியாது எனவும் மெஹ்தாப் கூறியும், ஃபிர்தவுஸ் கேட்கவில்லை.

எனவே திருமணம் செய்துகொள்வோம் என அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் மூன்று லட்சம் ரூபாய் வரை கொடுக்க வேண்டுமெனவும், இல்லை என்றால் திருமணம் செய்து வைக்க முடியாது எனவும் மெஹ்தாபின் காதலியான ஃபிர்தவுஸ் மற்றும் அவரது தந்தை மிரட்டி உள்ளனர். எனவே மன உளைச்சலில் இருந்த மெஹ்தாப் பணம் அதிகம் இல்லாததால் கடந்த வியாழக்கிழமை தூக்கில் தொங்கி உள்ளார். ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பதாக கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளார். இதன் அடிப்படையில் அவரது சகோதரர்கள் அவரது காதலி ஃபிர்தவுஸ் மற்றும் அவரது தந்தை மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.