திருமணத்துக்கு முன்னாடி அத பத்தி பேசணும்.! அப்போ தான் இன்பம் கிடைக்கும்.!

உடலுறவு என்று சொன்னாலே அது தவறான விஷயம் என நினைத்து துணையிடம் அதைப்பற்றி பேச தயங்குகின்றனர். உடலுறவு பற்றிய தவறான புரிதல்களே பல பிரச்சினைகளுக்கு காரணம் என சில நிபுணர்கள் கூறுகின்றன.

தற்போதய தலைமுறை தம்பதிகள் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக அவர்களின் கலவி வாழ்க்கை தான் உள்ளது என்று பேசப்படுகிறது. இதன் புரிதல் இல்லாத காரணத்தால் திருமணமான சில காலங்களிலே உடலுறவில் சலிப்பு அலல்து விருப்பமின்மை ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு தம்பதிகள் இருவரும் காரணம் என்று பல டாக்டர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், திருமணத்திற்கு முன்பே காதல் தொடங்கும் போது​​ஒரு கட்டத்தில் நீங்கள் செக்ஸ் குறித்த கதைகளை உங்கள் துணையிடம் பேச வேண்டும். அதாவது, அன்போடு கலந்த உடலுறவு பற்றி பேச ஆரம்பிக்க வேண்டும். குறிப்பாக, இது நேர்மறையாக இருக்கும் ஜோடிக்கு பெரிய விஷயம் இல்லை அது அனைவர்க்கும் தெரியும்.

அந்த வகையில், உங்கள் வருங்கால துணையை நீங்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன், உடலுறவு பற்றிய சில கருத்துக்களை பகிர வேண்டியது அவசியம் என்பதை பலர் உணரவில்லை.

ஆண்களே…! உங்க காதலி அல்லது மனைவி இந்த மாதிரியான விஷயங்கள தினமும் நினைப்பாங்களாம் அது என்ன தெரியுமா? மேலும், அவர்களின் விருப்பங்களைப் பற்றி பேசுவது இனிதே ஆரம்பமாக இருக்கும். அதன்படி நீங்கள் உங்கள் துணையிடம் படுக்கையில் எதை விரும்புகிறாள் அல்லது விரும்பவில்லை என்பதை அறிவது முக்கியமாம்.

 

ஆம்… இத நல்லா தெரிஞ்சிக்கோங்க, நீங்கள் காதலிக்கிறீர்கள் என்றால் உடலுறவு பற்றி உங்கள் துணை உங்களுடன் கட்டாயம் பேசவேண்டும் என்றும், உங்களுக்கு உடலுறவு சம்பந்தமான தேவையை பூர்த்தி செய்து கொடுப்பது உங்கள் துணையின் பொறுப்பு என்றும் நினைப்பதை தயவு செய்து நிறுத்துங்கள்.

இருவரும் இணைந்து செயல்பட வேண்டும். அதாவது, இருவருக்கும் பிடித்திருக்க வேண்டும் அது தான் சரியான உறவு மற்றும் உடலுறவு பற்றிய சாத்திய கூறாகும். இது தவிர, ஒருவரே எப்போதும் முன்னெடுத்து செல்ல முடியாது.

மேலும், உங்கள் ஆசைகள் மற்றும் தேவைகள் பற்றி நீங்கள் இருவரும் வெளிப்படையாக இருக்க வேண்டும்,பேச வேண்டும். இது உங்கள் துணையுடன் கலவிக்கு வசதியான தொடர்பை ஏற்படுத்த உதவுகிறது.