இந்தியாவுக்கு பதக்கங்களை பெற்று தாருங்கள்.. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருக்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ம் முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது. வரும் 31ம் தேதி முதல் தடகள போட்டிகள் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் 126 பேர் செல்ல உள்ளனர். இவர்கள் 18 விளையாட்டுகள் உள்ளடக்கிய 69 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி காணொளி மூலம் கலந்துரையாடி வருகிறார். இந்தியாவுக்கு பதக்கங்களை பெற்று தர வீரர்களுக்கு ஊக்கமளித்தும், முழு நம்பிக்கையுடன் களத்தில் இறங்க பிரதமர் அறிவுரை வழங்கி வருகிறார்.

இந்த கலந்துரையாடலில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன், சரத் கமல் கியோர் பங்கேற்றுள்ளனர். இந்த காணொலி நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர், இணை அமைச்சர் நிசித் பிரமனிக், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்