அட நம்ம மீரா மிதுனுக்கு திருமணமா .? வெளியான வைரல் வீடியோ.!

மணக்கோலத்தில் இருக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

By ragi | Published: May 29, 2020 05:27 PM

மணக்கோலத்தில் இருக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மீரா மிதுன் .

மீரா மிதுன், 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து சந்துரு கேஆர் இயக்கத்தில் வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற படத்திலும் நடித்தார். அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளுக்கு உள்ளானார் . சூப்பர் மாடலான இவர் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் ஒருவராவர். மேலும் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சர்ச்சைகளுக்கு உள்ளாவதே இவரது வழக்கம். வழக்கமாக ரசிகர்கள் இவரை திட்டியும், ஆபாசமாக பேசியும் வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது மீரா மிதுன் தனது டுவிட்டர் பக்கத்தில் மணக்கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனுடன் இது ரியல் என்றும், இதையும் காப்பி செய்யாதீர்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.. மேலும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் வீடியோவில் கூறியுள்ளார். இது உண்மையெனில் மணமகன் யார் என்ற கேள்வி நெட்டிசன்களிடம் எழுந்துள்ளது. மணப்பெண் கோலத்தில் இருக்கும் மீரா மிதுனின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

Step2: Place in ads Display sections

unicc