அனைவரும் விரைவில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள் – ராகுல் காந்தி

  • பொதுமக்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
  • அனைவரும் தவறாது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி ட்வீட்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் கொரோனா பொதுத் முடக்க தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா முழுவதும் விலகிவிடவில்லை. இதுபோன்ற அச்சுறுத்தலான சூழலில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்து, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், விரைவில் அனைவரும் தவறாது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.