கடலூர் அரசுப்பள்ளி ஆசிரியர் கார்த்திக் ராஜாவுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டு…!

கடலூர் அரசுப்பள்ளி ஆசிரியர் கார்த்திக் ராஜாவுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டு தெரிவித்து கடிதம். 

கடலூர் அரசுப்பள்ளி ஆசிரியர் கார்த்திக் ராஜா கல்வி ரேடியோ இணையதளம் மூலம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் – கற்பித்தல் பயிற்சி வழங்கிவருவதற்கு பாராட்டு தெரிவித்து தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ‘இக்கட்டான கொரோனா தொற்று நோய் காலத்தில் கல்வி கற்கக்கூடிய சூழ்நிலையில் இல்லாத மாணவ, மாணவிகளுக்கு கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றிய ஆசிரியர் திரு கார்த்திக்ராஜா அவர்கள் கல்வி ரேடியோ ஆர்வமுள்ள அரசு எனும் ஓராண்டிற்கும் மேலாக இணையதளத்தை உருவாக்கி அதில் பள்ளி ஆசிரியர்களை ஒன்றாக இனைத்து ஆன்லைன் மூலம் கேட்டுக்கொண்டே கற்பதற்கும், எழுதுவதற்கும் ஏற்பாடு செய்து தொடர்ந்து கல்விப் பணியாற்றி வரும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ இணையதளம் மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து கல்வி கற்பித்தலில் இன்னும் பல புதுமைகளை புகுத்திடவும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை வளர்க்கவும், சிறப்பாக செயல்படவும் ஆன்லைன் கல்வி ரேடியோ குழு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாழ்த்துரை எழுத வாய்ப்பு வழங்கிய திருமதி இ. இராஜலட்சுமி, பட்டதாரி ஆசிரியை (கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கோள்கிறேன்.’ என  தெரிவித்துள்ளார்.

Leave a Comment