பொதுக்குழு கூட்டம்.. ஒற்றை தலைமை வேண்டும்.. அதுவும் அவர்தான்! – செயற்குழு உறுப்பினர்கள்

ஒற்றை தலைமை வேண்டும் என்று பொதுக்குழுவில் கோரிக்கையை முன்வைப்போம் என்று செயற்குழு உறுப்பினர்கள் தகவல்.

அதிமுகவில் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி இன்று சென்னை வானகரத்தில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்குழு நடக்கும் இடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்களும், மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களும் என பலரும் திரண்டுள்ளனர். தற்காலிக அவைத்தலைவர் தமிழ் உசேன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பொதுக்குழு கூட்டத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. முக்கியமாக ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுமா என்று எதிர்பார்க்கபடுகிறது. ஒற்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில், பொதுக்குழு நடக்கிறது. எனவே, ஒற்றை தலைமை தீர்மானத்தில் ஈபிஎஸ் உறுதியாக உள்ள நிலையில், அதுபற்றி விவாதிகப்படுமா என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த நிலையில், அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையேற்க வேண்டும் என்று கோரிக்கை வைப்போம் என செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஒற்றை தலைமை வேண்டும், அதுவும் எடப்பாடி பழனிசாமிதான் வேண்டும் என்பதை பொதுக்குழு கூட்டத்தில் முன்வைப்போம் என்றும் கூறியுள்ளனர். இதனிடையே, அம்மாவின் மாணவராகவும், பக்தராகவும் இருக்கும் ஓபிஎஸ், கட்சியின் எதிர்காலத்தை மனதில் கொண்டு நல்ல முடிவை எடுப்பார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருந்தார். எனினும், ஈபிஎஸ்-க்கு ஆதரவு மாவட்ட செயலாளர்கள் அதிகமுள்ள நிலையில், ஒற்றை தலைமை குறித்து பொதுக்குழுவில் பேசப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here