பிரிட்டன் பாதிப்புகள் குறித்து வெளியான திடுக் தகவல் !வெளியே கசிந்த ரகசிய அறிக்கை….

பிரிட்டன் பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் என  வெளியே கசிந்த ரகசிய அறிக்கையால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக, பிரிட்டன் அரசிற்காக தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை,புஸ்பீட்  ( BuzzFeed) என்ற செய்தி இணையதளத்தின் மூலம் வெளியாகியுள்ளது. அதில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பிரிட்டன், எத்தகைய வர்த்தக ஒப்பந்தத்தை செய்துகொண்டு வெளியேறினாலும் பாதிப்பை தவிர்க்க முடியாது என கூறப்பட்டுள்ளது.
Image result for britain
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தத்தை பிரிட்டன் செய்து கொள்ளுமானால், 15 ஆண்டுகளில் 5 சதவீதம் அளவுக்கு பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்படும் என முன்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. அப்படி ஏதும் ஒப்பந்தம் செய்து கொள்ளாமல், உலக வர்த்தக கழக விதிகளின்படி நடந்துகொள்வதாக இருந்தால், சரிவு 8 சதவீதம் அளவுக்கு இருக்கும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment