கஜா நிவாரண பொருட்கள்:இன்று வரை சரக்கு கட்டணம் ரத்து …!

இன்று  வரை ரயில்களில் கொண்டு செல்லும் நிவாரண பொருட்களுக்கு சரக்கு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அரசு பேருந்துகளில் எடுத்து செல்லப்படும் நிவாரண பொருட்களுக்கு லக்கேஜ் கட்டணம் ரத்து செய்யப்பட்டது.

கடந்த நவம்பர் 23 ஆம் தேதி கஜா நிவாரணப் பொருட்களுக்கு ரயிலில் சரக்குக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் அனுப்பினார்.

இந்நிலையில்  முதலமைச்சர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று இன்று  (டிசம்பர்  10 ஆம் தேதி) வரை ரயில்களில் கொண்டு செல்லும் நிவாரண பொருட்களுக்கு சரக்கு கட்டணம் ரத்து செய்து  ரயில்வே அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

Leave a Comment