காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராக சம்மன்..!

திருமாவளவனை விமர்சித்த வழக்கில் காயத்ரி ரகுராமுக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்து கோவில்களின் அமைப்புகள் குறித்து ஒரு கூட்டத்தில் பேசி இருந்தார்  இது இந்து கோவில்களுக்கு எதிராக உள்ளதாக சர்ச்சை எழுந்தது.

இதனால், கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்தார். அதில், இந்துக்கள் திருமாவளவனுக்கு புடவை அனுப்புங்கள், திருமாவளவனுக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேர் என்னிடம் இந்துக்கள் குறித்து பேச சொல்லுங்கள் என்று பல கருத்துகளை தெரிவித்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் காசி என்பவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், திருமாவளவன் குறித்து நடிகை காயத்ரி ரகுராம் அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். இது அவருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே நடிகை காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

காயத்ரி ரகுராமுக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி வழக்கை ஜூலை 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

author avatar
murugan