,

அடுத்த பிளாக் பஸ்டருக்கு ரெடியான கவின்! ‘ஸ்டார்’ படம் பண்ணப்போகும் சம்பவம்!

By

Star movie

நடிகர் கவின் நடிப்பில் கடைசியாக வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது.  இந்த படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கவின் பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான இளன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஸ்டார் திரைப்படத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்திற்கான டைட்டில் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதனை தொடர்ந்து நாளை யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகவுள்ளது.

இதற்கிடையில், படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்தும் படம் எப்படி பட்ட கதை கொண்ட படம் என்பது பற்றியும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஸ்டார் திரைப்படம் கல்லூரிக் கதை, காதல் மற்றும் குடும்ப நாடகம் கலந்த கலவையாக இருக்குமாம். பிரபல மலையாள நடிகர் ஒரு முக்கியமான கேரக்டரில் இந்த படத்தில் நடிக்கவுள்ளார்.

அதைப்போல, இந்த திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் ஒருவர் பாலிவுட்டில் இருந்து மற்றொருவர் கோலிவுட்டில் இருந்து கவினுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்களாம். மேலும், படத்திற்கான படப்பிடிப்பு ஏற்கனவே 40 % முடிவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. முதல் & இரண்டாவது ஷெட்யூல் சென்னை & மும்பையில் நிறைவடைந்தது.

இன்னும் படத்தின் இறுதி ஷெட்யூல் மட்டுமே பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த  தகவலை படத்தின் இயக்குனரே சமீபத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, பியர் பிரேமா காதல் எனும் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படத்தை இயக்கிய இளன் கண்டிப்பாக இந்த படத்தையும் இளைஞர்களை கவரும் வகையில் எடுப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நடிகர் கவின் தனது நீண்ட நாள் காதலியான மோனிகாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு  திருமணம் செய்துகொண்டார். கவின் திருமணம் செய்துள்ள அந்த பெண் தனியார் பள்ளி ஆசிரியர். இவர்கள் இருவருக்கும் நேற்று முன்தினம் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.