500 டாலர் எல்லாம் ஒரு பரிசா…? தோனிக்கு கொடுத்த பரிசை பார்த்து கடுப்பான கவாஸ்கர்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இதற்கிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்தது 3 போட்டிகளிலும் அடுத்தடுத்து அரை சதங்கள் அடித்து இருந்த தோனி தொடர் நாயகன் விருது பெற்றார்.

தொடர் நாயகன் விருது பெற்ற தோனிக்கு வெறும் 500 டாலர்கள் பரிசாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கொடுத்திருந்தது. இதனை பார்த்து கடுப்பான முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்..

500 டாலர் எல்லாம் ஒரு பரிசா வீரர்களை வைத்து தான் நீங்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். வீரர்களை வைத்து தான் அந்த விளையாட்டு வளர்கிறது. இவ்வளவு பெரிய தொடரை நடத்திவிட்டு பரிசாக வெறும் 500 டாலர் கொடுத்து எந்தவிதத்திலும் நியாயமில்லை. அவர்களுக்கும் அதிகபட்சமாக பரிசுகளை அளிக்க வேண்டும் என்று கூறினார் கவாஸ்கர்.

author avatar
Srimahath

Leave a Comment