Gautama Sigamani

GauthamSigamanicase: அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்!

By

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி எம்பியுமான கவுதம சிகாமணி மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, அமைச்சர் பொன்முடியின் மகனும், எம்பியுமான கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு சென்னை எம்பி – எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதையடுத்து 2வது சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கின் விசாரணை செப். 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், 2006-2011 திமுக ஆட்சியில் அதிகளவு செம்மண் எடுத்த புகார் தொடர்பான வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

Dinasuvadu Media @2023