இந்திய நட்சத்திர வீரர் மீண்டும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கேப்டன்!

கவுதம் காம்பீர்  டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ஐ.பி.எல். தொடர் தொடங்கிய சில ஆண்டுகள் அவர் இடம் பெற்று இருந்தார்.

இதன்பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்ட காம்பீர், 7 ஆண்டுகள் அந்த அணியில் விளையாடினார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடரில் அவரை டெல்லி அணி 2 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இதனால் கவுதம் காம்பீர் சொந்த அணிக்கே மீண்டும் திரும்பினார். அவரை அணியின் கேப்டனாக நியமித்து அணியின் சி.இ.ஓ. ஹேமந்த் துவா (hemant dua) அறிவித்துள்ளார். கேப்டனாக அணியை விட்டுச் சென்றவர், மீண்டும் கேப்டனாகவே திரும்ப வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment