பெட்ரோல் விலை அதிகரிப்பு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது – தேமுதிக தலைவர்!

பெட்ரோல் விலை அதிகரிப்பு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது – தேமுதிக தலைவர்!

  • பெட்ரோல் விலை உயர்வுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்.
  • இது மக்களுக்கு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்ற உணர்வை கொடுக்கும்.

நாட்டில் தற்பொழுது பெட்ரோல் விலை மிக அதிக அளவில் உயர்ந்து கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொது மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளதாகவும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரித்து வருவதாக மத்திய அரசு கூறுவதை தற்போதுள்ள சூழ்நிலையில் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை கடந்துவிட்ட நிலையில், தமிழகத்திலும்  100 ரூபாயை கடந்து விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும்  தெரிவித்துள்ள அவர், அவ்வாறு 100 ரூபாய்க்கு பெட்ரோல் விலை உயர்ந்தால் காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் வாகனங்களின் வாடகைக் கட்டமுணம் மேலும் உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, கொரோனா பாதிப்பால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரக்கூடிய இந்த நிலையில், பெட்ரோல் விலையை உயர்த்துவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது எனவும், பொதுமக்களின் நலன் கருதி பெட்ரோல் விலையை குறைக்க மத்திய மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube