கங்குலி நீங்கள் அதை செய்யவேண்டும்- தோனி.!

கங்குலியிடம் தோனி கேப்டன்சியை பொறுப்பை ஏற்க வற்புறுத்தினார்

By bala | Published: Jul 11, 2020 06:08 PM

கங்குலியிடம் தோனி கேப்டன்சியை பொறுப்பை ஏற்க வற்புறுத்தினார்

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.மேலும் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது போட்டி என்று ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்பொழுது கிரிக்கெட் வாரிய சங்க தலைவருமான கங்குலி சமீபத்தில் அளித்த பேட்டியில் சுவாரசியமான தகவலை கூறியுள்ளார், அவர் கூறியது, கடந்த 2008ம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோனி என்னிடம் வந்து நீங்கள் கேப்டன்ஷி ஏற்றுக்கொள்ளுங்கள் என டோனி கூறியுள்ளார் அதற்கு கங்குலி மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் ஆனாலும், தோனி இடைவிடாமல் கங்குலியை கேப்டன்சியை பொறுப்பை ஏற்க வற்புறுத்தினார். அதன் பிறகு கடைசி விக்கெட் விழ இருந்த நிலையில் தோனி மீண்டுக் கேட்டுக் கொண்டதை அடுத்து கங்குலி கேப்டனாக செயல்பட ஒப்புக் கொண்டார். சில ஓவர்களுக்கு மட்டுமே அவர் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc