விஷால் மற்றும் சூர்யாவிற்கு தமிழில் எந்தளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவு தெலுங்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழை போல தெலுங்கிலும் இவர்கள் படங்கள் நல்ல வரவேற்ப்பை பெரும். அதன்படி இந்த வருடம் வெளிவந்த தெலுங்கு டப்பிங் படங்களில் மூன்று படங்கள் மட்டுமே வெற்றியடைந்துள்ளது.

அவை பொங்கலன்று சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் தெலுங்கில் கேங் என்ற பெயரில் வெளியானது. அதேபோல மித்ரன் இயக்கத்தில் வெளிவந்து தமிழில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் இரும்புத்திரை. இப்படம் தெலுங்கில் அபிமன்யுடு எனும் பெயரில் வெளியிடப்பட்டது. இதேபோல இந்தியா முழுவதும் பெரும் படப்பரப்பை படம் வெளிவருவதற்கு முன்னரே ஏற்படுத்திய பத்மாவத் திரைப்படம். இவை மூன்றும் தெலுங்கில் ஹிட்டான டப்பிங் படங்கள் என விநியோகிஸ்தர் தரப்பு அறிவித்துள்ளது.

DINASUVADU