டெல்லியில் மர்மகும்பல் துப்பாக்சூடு.! இரண்டு பெண்கள் உயிரிழப்பு..! முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்.!

By

Twowomenkilled

புதுடெல்லியில் இரண்டு பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லியின் ஆர்.கேபுரத்தில் உள்ள அம்பேத்கர் பஸ்தி பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் பிங்கி மற்றும் ஜோதி என்ற இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரண்டு பெண்களையும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருந்தும், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில், துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் இவர்களின் சகோதரரைத் தேடி வந்ததாகவும், பிறகு இவர்கள் இருவரையும் சுட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், முதற்கட்ட விசாரணையில் பணத் தகறாறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் அர்ஜுன், மைக்கேல் மற்றும் தேவ் என அடையாளம் காணப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், நீண்ட விசாரணைக்கு பிறகு சரியான காரணம் கண்டறியப்படும் என்று கூறிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எங்கள் எண்ணங்கள் இரு பெண்களின் குடும்பங்களுடனும் உள்ளன. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். டெல்லி மக்கள் மிகவும் பாதுகாப்பற்றவர்களாக உணரத் தொடங்கியுள்ளனர்.

tweet
tweet [Image Source : abplive]

டெல்லியின் சட்டம் ஒழுங்கை கையாள வேண்டியவர்கள், சட்டம் ஒழுங்கை சரி செய்யாமல், ஒட்டுமொத்த டெல்லி அரசையும் பிடிக்க சதி செய்கிறார்கள். இன்று, டெல்லியின் சட்டம் ஒழுங்கு எல்ஜிக்கு பதிலாக ஆம் ஆத்மி அரசாங்கத்தின் கீழ் இருந்திருந்தால், டெல்லி பாதுகாப்பாக இருந்திருக்கும். என்று கூறியுள்ளார்.