சிவில் சர்வீசஸ் தேர்வு.. தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்.!

சிவில் சர்வீசஸ் தேர்வு.. தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்.!

யூ.பி.எஸ்.சி மத்திய அரசின் பல்வேறு உயர் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி பணி நியமனம் செய்து வருகிறது.இந்நிலையில், கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 829 பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நேர்காணல் நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த  சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழகத்தை சார்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் என்பவர் இந்திய அளவில் 7-வது இடத்தையும், தமிழகத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

கணேஷ்குமார் பாஸ்கர்  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலை  சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ஆலோசனை
மாணவ - மாணவியரின் எதிர்காலத்துடன் கொரோனா ஒருபுறமும் , அதிமுக அரசு மறுபுறமும் விளையாடுகிறது - மு.க. ஸ்டாலின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள், எங்கள் மக்களுக்கு செய்த சேவைக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்!
"தேசிக விநாயகம் பிள்ளை" நினைவு நாளில், தமிழ் உணர்வை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்- பன்னீர்செல்வம்..!
70 ஆண்டுகளாக பாகிஸ்தானின் ஒரே ஒரு பெருமை பயங்கரவாதம் தான் - இந்தியா பதிலடி
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படவில்லை- தோனி..!
மனைவி குடும்பத்தினரால் கௌரவ கொலை செய்யப்பட்ட கணவர்!
கர்நாடக சட்டமன்றத்தில் மூன்று மணி நேரத்தில் நில திருத்த மசோதா உள்ளிட்ட  9 மசோதாக்கள் நிறைவேற்றம்
எஸ்.பி.பி யின் உடல் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.!
உலகளாவிய அமைப்பே நொறுங்கிவிட்டது - கனடா பிரதமர்!