கிறிஸ்தவ தேவாலயத்தின் அருகே வைக்கப்பட்ட விநாயகர் சிலை…! 30 பேர் கைது…!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மலைசுற்றுப்பாதையில் உள்ள தேவாலயம் அருகே இந்து அமைப்பினர் விநாயகர் சிலை வைத்த இந்து அமைப்பினர். 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மலைசுற்றுப்பாதையில் தேவாலயம் ஒன்று  உள்ளது. இந்நிலையில், திடீரென இந்து அமைப்பினர் பிள்ளையார் சிலை ஒன்றை வைத்து வழிபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தேவாலயத்தை சேர்த்தவர்கள், சிலையை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேசமயம், விநாயகர் சிலையை அகற்ற கூடாது என இந்து அமைப்பினர் தெரிவித்தனர். அப்போது பெண் ஒரு வர சாமியாடியபடி, ‘யாரு வந்தாலும் என்னை அசைக்க முடியாது’ என சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இருதரப்பினரிடையே கோட்டாட்சியர் இளவரசி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து, தள்ளு முள்ளுக்கு மத்தியில் விநாயகர் சிலை அகற்றப்பட்டது. மேலும், இது தொடர்பாக போலீசார் 30 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.