விநாயகர் சதுர்த்தி நிறைவு விழா! பாதுகாப்பு பணியில் 8,000 போலீசார்..

புனேவில் விநாயகர் சதுர்த்தி நிறைவு விழாவிற்க்காக 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாளை நடைபெற இருக்கும் விநாயக சதுர்த்தியின் கடைசிநாளான  விநாயகப் பெருமானின் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்விற்காக புனே முழுவதும் சுமார் 8,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா தலைமையில் இந்தப் பாதுகாப்புப் பணி நடைபெறும் எனவும், போக்குவரத்து மற்றும் ஊர்வலங்களை கட்டுப்படுத்த போக்குவரத்து கட்டுப்பாட்டு கிளையின் முழு ஊழியர்களும் சாலைகளில் பாதுகாப்பு பணிக்காக இருப்பார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment