அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காந்தி சிலை அவமதிப்பு! போலீசார் தீவிர விசாரணை!

அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காந்தி சிலை அவமதிப்பு! போலீசார் தீவிர விசாரணை!

அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காந்தி சிலை அவமதிப்பு.

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள,  மின்னியாபோலீஸ் நகரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஜார்ஜ் போலீஸ் அதிகாரி ஒருவரால், ஈவு இரக்கமற்ற முறையில், முழங்காலால் கழுத்து நெரித்து  கொல்லப்பட்டார். 

ஜார்ச், போலீஸ் அதிகாரியிடம், கெஞ்சி கேட்ட போதும், அந்த போலீஸ் அதிகாரி இரக்கம் காட்டவில்லை. இதனையடுத்து இவர் கொடூரமாக கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியான நிலையில்,  போலீஸ் அதிகாரியின் இந்த வெறி செயலை கண்டித்து, கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்த போராட்டத்தில், போலீஸ்காரர்களும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், பல இடங்களில் வன்முறைகளும், கலவரங்களும் நடந்து வருகிறது. இந்த போராட்டமானது, அமெரிக்காவில், 10 ஆண்டுகளில் நடந்திராத அமைதியின்மையாக கருதப்படுகிறது. 

இந்த பிரச்சனையே விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அடுத்த பிரச்சனையாக, அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை, மர்மநபர்களால் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, தூதரக அதிகாரிகள் சிலையை  பிளாஸ்டிக்  கவரால் மூடி வைத்துள்ள நிலையில், போராரட்டக்காரர்கள் தான் சிலையை அவமதிப்பு செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், காந்தி சிலை மர்மநபர்களால் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube