வீட்டு வாடகை கேட்டதால் ஆத்திரம் ! உரிமையாளர் குத்தி கொலை

குன்றத்தூரில் 4 மாதம் வீட்டு வாடகை கேட்டதால்  வீட்டின் உரிமையாளரை

By bala | Published: Jul 09, 2020 11:00 AM

குன்றத்தூரில் 4 மாதம் வீட்டு வாடகை கேட்டதால்  வீட்டின் உரிமையாளரை ஓட ஓட கத்தியை வைத்து குத்திய நபர்.

திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் குணசேகரன் இவர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர், மேலும் இவர் குன்றத்தூரில் இரண்டு வீடுகள் கட்டியுள்ளார், ஒரு வீட்டை வாடகைக்கு அஜித் என்பவருக்கு கொடுத்துள்ளார் மற்றோரு வீட்டில் குணசேகரன் வசித்து வந்தனர். இந்த நிலையில் அஜித் ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லமுடியாமல் இருந்தார்.

அஜித் கடந்த 4 மாதங்களாக வீட்டு வாடகை செலுத்தவில்லை என்பதால் வீட்டின் உரிமையாளர் குணசேகரன் நேற்று இரவு அஜித் வீட்டிற்கு சென்று வாடகை கேட்டுள்ளார், அப்பொழுது வீட்டில் அஜித் இல்லை, அதனால் குணசேகரனுக்கும் அஜித் குடும்பத்தாருக்கு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டிற்கு வந்த அஜித்திடம் அவரது குடும்பத்தார் வாடகையை கேட்டதை பற்றி கூறியுள்ளார், உடனடியாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த அஜித் வீட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை குத்தியுள்ளார், குத்தியவுடன் குணசேகரன் வேகமாக ஓடியுள்ளார் மேலும் அஜித் விடாமல் ஓட ஓட குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்.

உடனடியாக குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குணசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர், பின் கொலையாளி அஜித்தையும் கைது செய்தனர், இந்த கொலை அந்த பகுதியில் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc