ஹத்ராஸில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட பெண் குடும்பத்துக்கு நிதி!

ஹத்ராஸில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட பெண் குடும்பத்துக்கு நிதி!

ஹத்ராஸில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட பெண் குடும்பத்துக்கு நிதி வழங்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த 14ஆம் தேதி வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை நான்கு நபர்கள் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்த பெண் உயிரோடு இருக்கக் கூடாது என்பதற்காக கொடூரமாக அந்த பெண்ணை தாக்கி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது பெரும் அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து உத்திர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசிய அவர் பெண்ணின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும், நிதி குறித்தும் கூறியுள்ளார். மேலும் விரைவில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் எனவும் இதற்காக மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube