வரும் 31-ம் தேதி வரை அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் - புதுச்சேரி முதல்வர்

வரும் 31-ம் தேதி வரை அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் - புதுச்சேரி முதல்வர்

வரும் 31-ம் தேதி வரை அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்.

புதுச்சேரியில், யூனியன் பிரதேச பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனையடுத்து புதுச்சேரி முதல்வர் வெளியிட்டுள்ள வீடியோவில், புதுச்சேரியில் கடைகள் காலை 5 மணி முதல் 9 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது காலை 7  மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த வாரம் முதல், வரும் 31-ம் தேதி வரை ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.