தமிழகம் முழுவதும் இனி வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு!

5 ஆம் தேதி முதல் 4 ஞாயிற்றுகிழமைகளில் எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டது. ஆனாலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோன பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அங்கு முழு ஊரடங்கு  இன்று இரவு  வரை அமலில் உள்ளது.

ஏற்கனவே தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், தமிழகத்தில்  ஜூலை மாதம் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இதனைதொடர்ந்து, தமிழக முழுவதும் எவ்வித தளர்வுமின்றி, வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் (05.07.2020, 12.07.2020, 19.07.2020, 26.07.2020) முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என அறிக்கை வெளியிட்டது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.