உத்தரபிரதேசத்தில் ஜூலை 13 வரை முழு முடக்கம்.! போக்குவரத்துக்கு  தடை.!

உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்  இன்று இரவு

By murugan | Published: Jul 10, 2020 08:45 AM

உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்  இன்று இரவு 10 மணி முதல் 13- ஆம் தேதி அதாவது (திங்கள்கிழமை) காலை 5 மணி வரை கடும் ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,248 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை 31,156 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9,980 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 20,331 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று இரவு 10 மணி முதல் 13- ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 5 மணி வரை கடும் ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அம்மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த  நாட்களிலும் ஊரடங்கு மிக கடுமையாக அமல்படுத்தப்படும் எனவும் அத்தியாவசிய தேவை தவிர பிற போக்குவரத்துக்கு தடை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாள்களில் அரசு அலுவலகங்கள், கடைகள் மற்றும் சந்தைகள் அனைத்தும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc