நத்தம் பேரூராட்சியில் நாளை முதல் முழு ஊரடங்கு!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே

By surya | Published: Jul 10, 2020 12:33 PM

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக சில தளர்வுகளுடம் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 742 ஆக உயர்ந்துள்ளது.

இதன்காரணமாக, திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இன்று ஜூலை 11 முதல் ஜூலை 20-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

அங்கு பால் மற்றும் மருந்துக்கடை வழக்கம் போல் செயல்படும் எனவும், இதற்க்கு அனைத்து வியாபாரிகளும் ஒத்துழைக்குக்குமாறு அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc