கர்நாடகாவில் இன்று முழு ஊரடங்கு.! பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடாது.!

கர்நாடகாவில் இன்று முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது சேவை அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்து உள்ள நாடு முழுவதும் 4-ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த 4வது கட்ட ஊரடங்கிற்கான விரிவான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. மேலும், சிவப்பு, மஞ்சள், பச்சை மண்டலங்கள் எவை என்பதை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் மாநிலங்களுக்குள் பேருந்துகளை இயக்குவதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து அறிவிக்கலாம் என்றும் தெரிவித்தது.

அந்த வகையில், கர்நாடகாவில் பஸ், ஆட்டோக்கள் மற்றும் ரயில் சேவைகள் இயங்கலாம் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அனுமதி வழங்கிருந்தார். கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும். சிவப்பு மண்டலம் மற்றும் கண்டைன்மெண்ட் பகுதிகளில் மட்டும் இந்த உத்தரவு அமலாகாது என்று தெரிவித்திருந்தார். மாநிலங்களுக்குள் ரயில் சேவை தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார். சலூன் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று மட்டும் கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பஸ், ரெயில், ஆட்டோக்கள் போன்ற சேவைகள் ஓடாது என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகமாகி கூடுவதால் இதை தவிர்க்க வேண்டும் என்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதனிடையே, கர்நாடகா மாநிலத்தில் கொரோனாவால் 1743 பேர் பாதிக்கப்பட்டு, 41 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்