வெற்றியைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் நண்பர் அர்விந்த் கெஜ்ரிவால் – கமலஹாசன்

பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில், பஞ்சாபின் துரி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட பகவந்த் மான் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராக வரும்  16-ஆம் தேதி பதவியேற்கிறார். அவர் கூறியபடி பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலானில் முதல்வராக பதவியேற்றுக் கொள்கிறார். பகவந்த் மான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அமிர்தசரஸில் மார்ச் 13-ஆம் தேதி ஆம் ஆத்மி சார்பில் வெற்றி கொண்டாட்டம் நடைபெறுகிறது.

இந்த நிலையில், ஆம் ஆத்மியின் வெற்றிக்கு பலரும்  தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் குறிப்பிடவேண்டிய வெற்றியைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் நண்பர் அர்விந்த் கெஜ்ரிவால். கட்சி தொடங்கிய ஒரே தசாப்தத்தில் மாநில எல்லை கடந்து இரண்டாம் மாநிலத்தில் அழுத்தமாகக் காலூன்றியிருக்கும் ஆம் ஆத்மியைப் பாராட்டுகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.