12.2 C
London
Tuesday, September 28, 2021

வலிமை திரைப்படத்தின் வெறித்தனமான அப்டேட்.!

அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 14- ஆம் தேதி ஆயுதபூஜை அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தற்போது நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பல போஸ்டர்கள் கடந்த ஜூன் 11-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

வலிமை திரைபடதின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி மட்டுமே படமாக வேண்டி உள்ளது. விரைவில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், வெளிநாட்டில் நடைபெறவுள்ள 10 நாட்கள் படப்பிடிப்பு குறித்த நேரத்தில் சரியாக நடந்து முடிந்தால் வலிமை படத்தை வருகின்ற அக்டோபர் மாதம் 14- ஆம் தேதி ஆயுதபூஜை அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். கார்த்திகேயா, அச்சியுத் குமார், யோகி பாபு, சுமித்ரா, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

spot_imgspot_img

Hot Topics

Read More