விவசாயிகளுக்கு இலவச ஆழ்துளை கிணறு – ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி!

விவசாயிகளுக்கு இலவச ஆழ்துளை கிணறு – ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி!

விவசாயிகளுக்கு இலவச ஆழ்துளை கிணறு வழங்குவதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

ஆந்திராவில் தேர்தல் நடைபெற்ற பொழுது செய்த பிரச்சாரத்தில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தண்ணீர் கனவு திட்டத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக ஆழ்துளை கிணறு அமைத்து தரப்படும் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது அவர் அளித்த வாக்குறுதியின் படி ஆந்திராவில் உள்ள விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து தரும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இரண்டு லட்சம் ஆழ்துளை கிணறுகள் தோன்றுவதற்காக ஒரு தொகுதிக்கு ஒரு ஆழ்துளை கிணறு தோண்டக்கூடிய இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காணொளிகாட்சி மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து விவசாயிகளிடம் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, தான் அளித்த வாக்குறுதியின்படி ஒய் எஸ் ஆர் தண்ணீர்  கனவு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக அமைத்து தர நிர்ணயித்துள்ளோம், இந்த திட்டத்தின்படி 144 கிராமப் பகுதிகள் 19 நகர்ப்புறங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள் பயனடையும் முடியும் எனவும் கூறியுள்ளார். மேலும் தண்ணீர் இறைக்க தேவையான மோட்டரும் அரசு சார்பில் இலவசமாகத் தரப்படும் எனவும், அதற்காக கூடுதலாக 1600 கோடி செலவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் வாக்களித்தபடி செயல்படுவதால் மக்கள் இவரை பெரிதும் புகழ்ந்து வருகின்றனர்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube