பெண்களுக்கான இலவச பேருந்து சேவை ஒரு பொருளாதார புரட்சி!! – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்..

தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை ஒரு பொருளாதார புரட்சி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு மாநில திட்டக்குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. பெண்களுக்கான இலவச பேருந்து சேவை பற்றி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அரசின் முக்கிய முயற்சிகளில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவையும் ஒன்று. பெண்களுக்கான இலவச பேருந்து சேவைகள் குடும்பங்களுக்கு 8 முதல் 12% சேமிப்பை உறுதி செய்துள்ளது. இதன் பயனாளிகளில் 80 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதி திராவிட சமூகங்களைச் சேர்ந்தவர்கள், இது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

இலவசம் என்ற குறுகிய அம்சத்துடன் மட்டும் இத்திட்டம் நின்றுவிடக் கூடாது. எனவே, பெண்களுக்கான இந்தத் திட்டத்தை இலவசம் என்று மட்டுப்படுத்தாமல், இது ஒரு பொருளாதார புரட்சியாகப் பார்க்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

author avatar
Dhivya Krishnamoorthy

Leave a Comment