ஒடிசாவில் இருந்து கொல்கத்தாவிற்கு இலவச பேருந்து சேவை..முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவு.!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று முந்தினம் இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த கோர விபத்து சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தால் பல இடங்களில் ரயில் சேவைகள் தடைபட்டுள்ளது. இந்த நிலையில், ரயில் சேவைகள் தடைபட்டதைக் கருத்தில் கொண்டு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் புரி, புவனேஸ்வர் மற்றும் கட்டாக் ஆகியவற்றிலிருந்து கொல்கத்தாவிற்கு இலவச பேருந்து சேவை என அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில்  ” ஒடிசாவின் கட்டாக், புவனேஸ்வர், புரி ஆகிய பகுதிகளில் இருந்து கொல்கத்தாவிற்கு இலவச பேருந்து சேவை  என  முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டு உள்ளார். முழு செலவும் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ஏற்கப்படும் & பாலசோர் வழித்தடத்தில் வழக்கமான ரயில் சேவைகள் சீராகும் வரை இலவச பேருந்து சேவை ஏற்பாடு தொடரும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.