மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது மோசடி வழக்கு..!

சர்வதேச துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்திகா சிங், மத்திய அமைச்சரும், அமேதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்மிருதி இரானி மற்றும் அவரது உதவியாளர் மீது ஊழல் குற்றம் சாட்டியுள்ளார்.  ஸ்மிருதி இரானி, அவரது தனிப்பட்ட செயலாளர் விஜய் குப்தா மற்றும் ரஜ்னீஷ் சிங் ஆகியோருக்கு எதிராக வர்திகா சிங் எம்.பி-எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வர்திகா சிங் கூறுகையில், பெண்கள் மத்திய ஆணையத்தில் உறுப்பினராக இருக்க ஸ்மிருதி இரானியின் தூண்டுதலின் பேரில் அவரது இரண்டு “உதவியாளர்களான” விஜய் குப்தா மற்றும் ரஜ்னிஷ் சிங் ஆரம்பத்தில் தன்னிடமிருந்து 1 கோடி கேட்டதாகவும், பின்னர் அந்த தொகையை 25 லட்சம் செலுத்துமாறு கூறப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் அவரது நெருங்கிய தொடர்புகளால் தான் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும், ஸ்மிருதியின் தொடர்புகளில் ஒருவர் தன்னை சமூக ஊடகங்களில் அவதூறாக பேசியதாகவும் வர்திகா சிங் குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த விவகாரம் ஜனவரி 2 ஆம் தேதி விசாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.  நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்கக் கோரி அமித்ஷாவிற்கு வர்திகா சிங் ரத்தத்தில் கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
murugan