பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அடையாளமாக இருக்கும் ஈபிள் டவரை காண உலகெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் தினமும் குவிந்து வருவது வழக்கம். இந்த டவர் உயரம் 324 மீட்டராகும்.

இந்த டவர் மீது ஒரு இளைஞர் அங்குள்ள பாதுகாவலர்கள் யாருக்கும் தெரியாமல் ஏறிக்கொண்டிருந்தார். அவர் ஏறிக்கொண்டிருக்கும் போது கவனித்த சில சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

ஆனால் அவர் அதற்குள் 149 மீட்டர் அதாவது 488 அடி உயரத்தில் ஏறி விட்டார். தன்னை கட்டாயப் படுத்தினால் அங்கிருந்து குதித்து விடுவேன் எனவும் அங்குள்ள பாதுகாவலர்களை பார்த்து மிரட்டினார். இதனால் அங்கு சுற்றுலா பயணிகள அனுமதிக்க மறுத்துவிட்டனர். பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவர் நீக்கப்பட்டார் இதன் காரணமாக ஈபில் டவர் தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்கு முன்னர் ஏற்கனவே 980 அடி உயரம் கொண்ட ஒரு கோபுரத்தின் மீது ஏறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here