நாடு முழுவதும் நான்கு சக்கர வாகனங்களுக்கு நாளை முதல் பாஸ்டேக் கட்டாயம்!

ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக்  அட்டை கட்டாயம் என மத்திய சாலை போக்குவரத்துக்கு நெடுஞ்சாலை துறை உத்தரவிட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளை கடக்கும் பொழுது வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட நேரம் நிற்க கூடிய நிலை ஏற்படுகிறது. இந்த நிலையை மாற்றுவதற்காகவும்,  பணம் விரைவில் வசூலிக்கப்பட்டு விரைவாக செல்வதற்காகவும் பாஸ்டேக் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் சுங்க சாவடிகளை கடந்து செல்கையில் பாஸ்டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை உத்தரவிட்டு உள்ளது.

வாகன ஓட்டிகள் இந்த பாஸ்டேக் அட்டையை வசதியாக பெறுவதற்காக சுங்கச்சாவடிகளுக்கு அருகே முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 48 சுங்கச் சாவடிகளிலும் நாளை முதல் பாஸ்டேக் கட்டாயம் எனவும், பாஸ்டேக் கணக்கில் இருந்து தான் இனி சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுங்க சாவடியை கடக்கும் 85 சதவீதத்திற்கும் அதிகமாக வாகனங்களில் பாஸ்டேக் அட்டை உள்ளதாகவும் நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.

author avatar
Rebekal