நான்கு மாதங்களுக்கு பின் விளம்பரம் படத்தில் நடித்த நயன்தாரா.! குஷியில் ரசிகர்கள்.!

நான்கு மாதமாக நிலவி வரும் ஊரடங்கில் நயன்தாரா விளம்பரம் படம் ஒன்றில்

By ragi | Published: Jul 16, 2020 04:49 PM

நான்கு மாதமாக நிலவி வரும் ஊரடங்கில் நயன்தாரா விளம்பரம் படம் ஒன்றில் நடித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக உயர்ந்து கொண்டிருப்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயனதாரா. தற்போது நயன்தாரா ஆர். ஜே. பாலாஜியுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி நயனதாரா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.மேலும் காதலான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரண்டு காதல், ரஜினிகாந்தின் அண்ணாத்த, நெற்றிக்கண் ஆகிய படங்களிலும் நடிக்கவுள்ளார்.

கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நயன்தாரா, தற்போது விளம்பர பட ஒன்றில் நடித்துள்ளார். உஜாலாவிற்காக நடித்த அந்த விளம்பர பட வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Step2: Place in ads Display sections

unicc